கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு வருவாய்த்துறையினர் சீல் வைப்பு.. நீதிமன்ற உத்தரவின்பேரில் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சீல்

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
race course
race course
Published on: 

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் கிண்டி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர்.

நிலுவைத் தொகை பாக்கி காரணமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் பல ஆயிரம் கோடி ரூபாய் குத்தகை பாக்கியை செலுத்தவில்லை என புகார் எழுந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, குதிரை பந்தயம் நடக்கும் மைதானத்திற்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

newstamil.tv