KRP Dam open
KRP Dam open

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.பி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 999 கன அடியாக இருந்த நிலையில், இரவு பெய்த மழையால் அது 1275 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1213 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

newstamil.tv