cctv
மாவட்ட செய்திகள்
உறவினர்களுக்கு இடையே நிலப்பிரச்சனை
நிலப்பிரச்சனையில், கட்டிப்புரண்டு சண்டை போட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே நிலப்பிரச்சனையில், தகராறில் ஈடுபட்ட உறவினர்கள், ஒருவரை ஒருவர் கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கிக் கொண்டு, கட்டிப்புரண்டு சண்டை போட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கொடுவாய் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் வீட்டிற்கு வந்த உறவினர்களான ராதாமணி, சின்னசாமி, பெரியசாமி உள்ளிட்டோர் தாக்கியதில், பழனிசாமியின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். பழனிசாமி அளித்த புகாரின் பேரில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நிலம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. Tiruppur Land Issue Fight | இடப்பிரச்சனை, ரோட்டுக்கு வந்த சண்டை, பதைபதைக்கும் காட்சிகள் | CCTV
