விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு.. தரையிறங்க முயன்ற விமானத்தின் மீது லேசர் லைட் ஒளி

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5
5
Published on: 

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முயன்று தாழ்வாக பறந்தபோது பச்சை நிறத்திலான லேசர் லைட் அடிக்கப்பட்டது.

இதனை கவனித்த விமானி விமானத்தை தரையிறக்காமல் உயரத்தில் பறக்க வைத்து வானிலேயே வட்டமடித்தார்.

இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரேடார் கருவி மூலம் ஒளி எங்கியிருந்து வந்தது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து லைட் அடிக்கப்பட்டது நின்றுவிட்ட நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

newstamil.tv