

திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி
மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது. குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
கல்குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியிடம் விசாரணை செய்த போது, அய்யர் பங்களா எழில் நகர் ரோஜா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
உறவினர்கள் வீடுகளில் ரெய்டு
கல்குவாரி விதிமீறல் தொடர்பாக சிவகங்கை பூவந்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் மைத்துனர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெற்றது. பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஆதரவாளர்களான திமுக ஒன்றிய செயலாளர்கள் பொன்ராம், தன்ராஜ் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு
அரசுக்கு 2 கோடியே 32 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்திய கல்குவாரி முறைகேட்டில் மூர்த்திக்கு தொடர்புள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை வாடிப்பட்டி அருகே சத்திரவெள்ளாளப்பட்டியில் நிலத்திலிருந்து சரளைக் கற்கள் வெட்டி எடுத்ததில் 3 கோடியே 7 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குவிந்த ஆதரவாளர்கள்
மதுரையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீடு முன்பு திமுகவினர் குவிந்தனர். மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் நாற்காலிகள் போட்டு அமர்ந்ததால் பரபரப்பு நிலவியது.
வீடியோவைக் காண...