சில்மிஷ டாக்டருக்கு போலீசார் ஆதரவு என புகார்

காவலரின் மனைவியிடமே, 85 வயது மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராடினர்.
சில்மிஷ டாக்டருக்கு போலீசார் ஆதரவு என புகார்
Published on: 

மதுரையில் உள்ள தனியார் கிளீனிக்கிற்கு சென்றிருந்த பெண்ணிடம் 85 வயது மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராடினர்.

இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட்டு மருத்துவரை காப்பாற்ற முயல்வதாகவும், அதற்கு காவல்துறையும் ஒத்து ஊதுவதாகவும் உறவினர்கள் பரபரப்பை கிளப்பும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

85 வயதான மருத்துவர்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் தனது மனைவி மற்றும் குழந்தையை சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தான் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரையில் உள்ள ஷிவானி என்ற தனியார் கிளினிக்கிற்கு காலையிலேயே தனது குழந்தையை அப்பெண் அழைத்து வந்திருக்கிறார்.

அப்போது 85 வயதான மருத்துவர் துரைராஜ் கேரள மாநிலம் குருவாயூருக்கு சென்றிருந்ததால், மாலை அவர் வரும் வரை குடும்பத்தினருடன் அப்பெண் காத்திருந்தார். மருத்துவர் வந்தபின்னர் இருவரையும் அறைக்கு அழைத்துச் சென்ற குழந்தைக்கு சிகிச்சை அளித்துவிட்டு மருந்துகளை எழுதி கொடுத்திருக்கிறார்.

காவலர் மனைவியிடமே...

இதனையடுத்து தனக்கு தோள் பட்டையில் வீக்கம் வலி இருப்பதாக அப்பெண் மருத்துவரிடம் கூறவே, அவரது தாய் மற்றும் தந்தையை வெளியே அனுப்பிவிட்டு மருத்துவர் சிகிச்சை பார்த்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவருக்கு பரிசோதனை செய்வதாக கூறி மருத்துவர் தனது எல்லையை மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண் கத்தி கூச்சலிட்டுக்கொண்டு மருத்துவ அறையைவிட்டு வெளியே ஓடி வந்ததாக தெரிகிறது.

அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்

இதையடுத்து அவசர காவல்துறை அழைப்பு எண் 100க்கு அப்பெண் அழைக்கவே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மருத்துவர் துரைராஜை மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதோடு அடுத்த நாளே புகார் அளித்த அப்பெண்ணும், குடும்பத்தினரும் போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கொதித்தனர்.

மேலும், அமைச்சர் நிர்மல்குமாருக்கு வேண்டப்பட்ட மருத்துவர் என்பதால் நடவடிக்கை எடுக்க போலீசார் மறுத்ததாக உறவினர்கள் ஆத்திரத்தை கொட்டித்தீர்த்தனர்.

பூதாகரமான பிரச்சினை

மருத்துவர் துரைராஜை உடனே வெளியே விட்டுவிட்டதாக கொத்தளிந்த பெண்ணின் உறவுகள், பாலியல் சீண்டலே நடக்கவில்லை என காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கூறுவதாக பகீரை கிளப்பினர்.

அதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராடவே, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் பற்றியுள்ளது.

ஒருபக்கம் அரசியல் அழுத்தம், மறுப்பக்கம் காவல்துறையின் ஒருதலைப்பட்ச செயல்பாடு என இந்த பாலியல் சீண்டல் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

வீடியோவைக் காண...

சில்மிஷ டாக்டருக்கு போலீசார் ஆதரவு என புகார்
சில்மிஷ ஃபேமிலி டாக்டர் - போலீசார் வேடிக்கை பார்ப்பதாக புகார்