

கார்த்திகை தீபத் திருநாள்
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 12 எஸ்.பி. அந்தஸ்து அதிகாரிகள் தலைமையில் 5 ஆயிரத்து 618 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகள் RED ZONE ஆக அறிவிக்கப்பட்டு, இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, இரும்புத் தடுப்புகளை வைத்து போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தடுத்து நிறுத்தம்
திருப்பரங்குன்றம் தீப நிகழ்வுக்கு புறப்பட தயாரான பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். நெல்லையில் உள்ள வீட்டின் முன்பாக முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இந்துத்துவ அமைப்பினர் 400க்கும் மேற்பட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலையை நோக்கி செல்ல இருந்தவர்களை வீட்டுக்குள்ளேயே காவல்துறை முடக்கியது.
மதுரை மாவட்டத்தில் நாளை காலை 10 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீடியோவைக் காணலாம்