11
மாவட்ட செய்திகள்
கைத்தறி பூங்கா திறப்பு விழாவை புறக்கணித்த எம்எல்ஏ... கே.வி.குப்பம் எம்எல்ஏவின் பெயர் கல்வெட்டில் இல்லை
வேலூரில் கைத்தறி பூங்கா திறப்பு விழாவின்போது கல்வெட்டில் தனது பெயர் இல்லை எனக்கூறி கே.வி. குப்பம் எம்எல்ஏ நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
வேலூரில் கைத்தறி பூங்கா திறப்பு விழாவின்போது கல்வெட்டில் தனது பெயர் இல்லை எனக்கூறி கே.வி. குப்பம் எம்எல்ஏ நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
கே.வி. குப்பம் தொகுதிக்குட்பட்ட கொண்டசமுத்திரம் பகுதியில் கைத்தறி பூங்கா திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் காந்தி உள்ளிட்டோரின் பெயர் இருந்த நிலையில்,
சொந்த தொகுதியின் எம்எல்ஏவான ஜெகன் மூர்த்தியின் பெயர் இடம்பெறவில்லை என தெரிகிறது.
இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
இதனையடுத்து தற்காலிகமாக ஜெகன் மூர்த்தியின் பெயர் கல்வெட்டில் ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டது.

