SLM SP Murder visit
SLM SP Murder visit

நகைக்காக கொடூரமாக கொல்லப்பட்ட மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை..!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆதங்கம் தெரிவித்தனர்.
Published on: 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆதங்கம் தெரிவித்தனர்.

கடந்த 20ம் தேதி சின்னேரிகாடு பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி மாடுமேய்த்துக் கொண்டிருந்தபோது நகைக்காக அவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் நரேஷ்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

newstamil.tv