CHN TRain derail
மாவட்ட செய்திகள்
முத்துநகர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து
தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், அரை மணி நேரத்தில் தடம் புரண்ட ரயிலை சரி செய்து ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே பணிமனைக்கு பராமரிப்பு பணிக்காக சென்ற முத்துநகர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. எழும்பூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில், சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே பணிமனைக்கு பராமரிப்பு பணிக்காக சென்றது. பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் எழும்பூர் ரயில் நிலையம் சென்ற போது, ரயில் தடம் புரண்டது. தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், அரை மணி நேரத்தில் தடம் புரண்ட ரயிலை சரி செய்து ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

