Namakkal
மாவட்ட செய்திகள்
டாஸ்மாக் ஊழியரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்... வசூல் பணம் ரூ.2.80 லட்சத்தை பறித்துச் சென்ற கும்பல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வசூல் பணத்தை திருடி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வசூல் பணத்தை திருடி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில், முத்துசாமி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
முத்துசாமி வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்பனை பணத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கத்தியால் அவரை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றனர்.
