41
மாவட்ட செய்திகள்
நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகளை திருடிய மர்ம நபர்கள்.. திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மதுரை மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள முனியாண்டி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆட்டு கிடாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிய முனியாண்டி சுவாமிக்கு நேர்த்திக்கடனாக சுமார் 107க்கும் மேற்பட்ட ஆடுகள் விடப்பட்டது.
மதுரை மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள முனியாண்டி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆட்டு கிடாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
வெளியூர்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிய முனியாண்டி சுவாமிக்கு நேர்த்திக்கடனாக சுமார் 107க்கும் மேற்பட்ட ஆடுகள் விடப்பட்டது.
இதில் 15 ஆடுகள் உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி 10 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள், தொடர்ந்து நேற்று முன் தினம் 2 ஆடுகளை திருடிச் சென்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

