

நெல்லை மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், கார் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
முன்னீர் பள்ளம் கிராம ஊராட்சியில் உறுப்பினராக இருக்கும் சரஸ்வதியின் வீட்டிற்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை வீசியது.
அதே கும்பல் நெல்லை டவுன் வயல் தெருவில் உள்ள பைக் ஷோரூம் மீதும் பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.