குப்பைக் கிடங்கில் பட்டாசுக் கழிவுகளால் தீ விபத்து

தீயில் எரிந்து நாசமான பல வாகனங்கள் பட்டாசுக் கழிவுகளுக்கு தீ வைத்தபோது விபத்து
தீ விபத்து
தீ விபத்து
Published on: 
Summary

குப்பைக் கிடங்கில் பட்டாசுக் கழிவுகளால் தீ விபத்து தீயில் எரிந்து நாசமான பல வாகனங்கள் பட்டாசுக் கழிவுகளுக்கு தீ வைத்தபோது விபத்து

நகராட்சி குப்பை கிடங்கு

ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து – கொழுந்துவிட்டு
எரிந்த தீயால் வாகனங்கள் நாசம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் ராசிபுரம்
நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது

குப்பை தரம் பிரிக்கும் பணி

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குப்பை கிடங்கு
குப்பை கிடங்குNews Tamil 24*7

இந்த நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் பரவிக் கிடந்த பட்டாசுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டு, குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்தன.

பட்டாசுகள் வெடித்துள்ளன

அப்போது குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துள்ளன.

இதில் இருந்து வெளியான தீப்பொறி மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மீது விழுந்ததால், குப்பைகள் மளமளவென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

தீயை அணைக்கும் பணி

இந்த தீ விபத்தில் குப்பைகளை எடுத்துச் செல்லும் ஒரு டாடா ஏஸ் வாகனம், மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயில் சிக்கி எரிந்து நாசமாகின.

ராசிபுரம்
ராசிபுரம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்து
அரிசி கடத்தல் கும்பலின் மெகா பிளான், லஞ்ச வழக்கில் சிக்கிய காவலர்கள்