

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் சென்னை, அண்ணா நகரில் 97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்பாயத்திற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் புது அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.