

மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ். வலியுறுத்தி உள்ளார்.
சென்னை அசோக் நகரில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ஐயப்பன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிதுள்ள அவர், திமுக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்