Mayiladuthurai
Mayiladuthurai

ஓ.என்.ஜி.சி. பைப்லைனில் எரிவாயு கசிவு... இரவு முழுவதும் எரிவாயு கசிந்ததால் மக்கள் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி பைப்லைனில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
Published on: 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி பைப்லைனில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

சேத்திரபாலபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் பைப்லைனில் லேசான வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓஎன்ஜிசி நிர்வாகம் கசிவை தடுக்க நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், கும்பகோணம்- மயிலாடுதுறை பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

newstamil.tv