TVL Anganvaadi
TVL Anganvaadi

இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம் குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டும் பெற்றோர்..!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை இடித்துவிட்டு உடனடியாக புதிய அங்கன்வாடி மையைம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை இடித்துவிட்டு உடனடியாக புதிய அங்கன்வாடி மையைம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பகுதியில் இயங்கி வரும் இரண்டு அங்கன்வாடி மையங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கட்டிடம் மிகவும் பழுதாகி இடியும் நிலையில் உள்ளதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மிகவும் தயக்கம் காட்டுகின்றனர்.

newstamil.tv