Chennai airport
Chennai airport

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம்... 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம்

3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Published on: 

3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுதந்திர தினம்,கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு என தொடர் விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாயினர்.

ரயில், பேருந்து என சாலை மார்க்கமாக வாகனங்களில் சென்றால், 2 நாட்களை பயண நேரமே எடுத்துக் கொள்ளும் என்பதால் விடுமுறையை,

வீணாக்க விரும்பாத மக்கள், விமானங்களில் பயணம் செய்கின்றனர்.

இதன் காரணமாக மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் செல்வதற்கான விமானங்களில் கூட்டம் அலைமோதியது.

கட்டணங்களும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருந்தன.

newstamil.tv