மூதாட்டியிடம் நகை பறித்த திருடர்கள் 15 கி.மீ. சேஸிங் செய்து பிடித்த மக்கள்

மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு பைக்கில் தப்பிச்சென்ற இருவரை சினிமா பட பாணியில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 16 வயது சிறுவன் உட்பட இருவர் சிக்கியது எப்படி? நடந்தது என்ன?
நகை பறிப்பு
Published on: 

தனியே வசித்த மூதாட்டி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற மூதாட்டி தனியாக வசித்து வரும் நிலையில், வழக்கம் போல் வீட்டருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் பேச்சு கொடுப்பது போல் நடித்து, மூதாட்டியிடம் இருந்து 3 சவரன் நகையை பறித்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டதும், அங்கிருந்த இளைஞர் ஒருவர் முயன்றும் திருடர்களை பிடிக்க முடியாமல் போனது.

ஸ்பார்ட்ன் வகையறா
திருட்டு சம்பவம்நியூஸ்தமிழ்24x7

15 கி.மீ. துரத்தல்

உடனே இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்ற இளைஞர், செல்லும் வழியல் தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை இளைஞர் பின் தொடர்ந்து செல்ல தெரிந்த நண்பர்களும் உடன் சென்றதோடு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரும் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.

சிக்கிய திருடர்கள்

பெரம்பலூர் மாவட்ட எல்லையை கடந்து அரியலூர் - தஞ்சாவூர் பழைய புறவழிச்சாலையில் நகையை பறித்து சென்றவர்கள் சென்ற போது, டிராக்டர் பட்டறையில் பணியாற்றி வரும் ஆறுமுகம் என்பவர் வாகனத்தை வழிமறித்து இருவரையும் தாக்கினார். நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாகனத்தை ஓட்டி சென்ற 16 வயது சிறுவன் வசமாக சிக்கினான்.

தப்பிச் சென்று சித்தேரியில் தலைமறைவான சாரதி என்ற இளைஞரை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் பிடித்தனர். அப்போது ஆத்திரம் தீராத மக்கள், திருடர்களை வெளுத்து வாங்கினர். அதில் ஒருவன் முதுகு பகுதியில் ஸ்பார்ட்ன் வகையறா என பச்சை குத்தப்பட்டிருந்தது.

திருட்டு சம்பவம்
சிக்கிய திருடன்நியூஸ்தமிழ்24x7

16 வயது சிறுவனும்...

கரூர் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த சாரதி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் இருவரும் சேர்ந்து நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சாரதி மீது ஏற்கனவே பைக் மற்றும் ஆடு திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனமும் திருட்டு வாகனமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை பறிப்பு
கண்ணகி நகர் கபடி கார்த்திகாவுக்கு அநீதி? திறமைக்கு பரிசு சதியா?