Ramanathapuram
Ramanathapuram

பெருமாள்தேவன்பட்டி தர்ம முனீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா... 2000 கிலோ ஆட்டுக்கறி, 1,300 கிலோ அரிசியைக் கொண்டு அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, 2000 கிலோ ஆட்டுக்கறி, 1,300 கிலோ அரிசியை கொண்டு மணக்க மணக்க அசைவ விருந்து தயார் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெற்றது.
Published on: 

பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 121 ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டு, 9 சமையல் கலைஞர்களால் 9 அண்டாக்களில் சமைக்கப்பட்டதோடு, 13 மூட்டை அரிசியை கொண்டு சாதம் வடிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டது.

சுயம்பு தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்து படையல் வைக்கப்பட்ட பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

newstamil.tv