Tenkasi
மாவட்ட செய்திகள்
மருமகளை தாக்க முயன்ற மாமனார்... மாமனாரை பிடித்து போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் கடையத்தில் மாமனார், தனது மருமகளை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையத்தில் மாமனார், தனது மருமகளை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலானூரை சேர்ந்த சக்திவேல் கடந்த ஆண்டு இறந்த நிலையில் நிலையில், அவரது மனைவி அருணா தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கணவன் வைத்திருந்த இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் கடையை அருணா, நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சக்திவேலுவின் தந்தை கடைக்கு சென்று மருமகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார் ,
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை ஆய்வாளர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அருணாவை மீட்டு தனது ஜீப்பில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,
அருணாவின் மாமனாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
