12
மாவட்ட செய்திகள்
"தன் மகனை போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டம்".. பிரபல ரவுடி வசூர் ராஜாவின் தாய் பரபரப்பு புகார்
கோவை மத்திய சிறையில் உள்ள தமது மகன் வசூர்ராஜாவை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவனை காப்பாற்ற கோரியும், வேலூர் ஆட்சியரிடம் தாய் கலைச்செல்வி மனு அளித்துள்ளார்.
கோவை மத்திய சிறையில் உள்ள தமது மகன் வசூர்ராஜாவை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவனை காப்பாற்ற கோரியும், வேலூர் ஆட்சியரிடம் தாய் கலைச்செல்வி மனு அளித்துள்ளார்.
சிறையில் இருந்தபடி தனது அடியாட்களை வைத்து பணம் கேட்டு மிரட்டி தங்கராஜ் என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வசூர் ராஜாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
இந்நிலையில் வசூர்ராஜாவின் மனைவியுடன், அவரது தாய் கலைச்செல்வி வேலூர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், தனது மகன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

