

229 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 135 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
காவல்துறை சார்பில் 27 கோடியே 59 லட்சம் ரூபாயிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 13 கோடியே 54 லட்சம் ரூபாயிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் 60 லட்சம் ரூபாயிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
இதேபோல் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு 39 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய அவர், 2 மாநில அலுவலக கட்டடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார்.