

மதுரை மத்திய சிறைத்துறை பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி 39 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்த சிறைத்துறை 2 ஆம் நிலை காவலர் அலெக்ஸ்பாண்டி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
தலைமறைவான காவலரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை புரசை உடைப்பு பகுதியில் உள்ள திறந்தவெளி சிறையில், கைதிகள் மூலம் விளைவிக்கப்படும் பழங்கள்,காய்கறிகள் விற்பனை செய்யவதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரில் சிறப்பு தணிக்கை குழு சோதனை நடத்தியது.
அதில் காவலர் அலெக்ஸ்பாண்டி அலுவலக பாஸ்வேர்டை பயன்படுத்தி, சிறைவாசிகளின் ஊதியம் போன்ற பணப்பரிவர்த்தனைகளில் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்ட்டது.