Tirupur
Tirupur

புலம்பெயர் தொழிலாளர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு

திருப்பூர் பெருமாநல்லூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
Published on: 

திருப்பூர், சிறு பூலுவப்பட்டி சாலையில் கொட்டப்படும் குப்பைகளால், கடும் துர்நாற்றம் வீசுவதாக கூறி, பொதுமக்கள் மற்றும் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறு பூலுவப்பட்டி சாலையில் காலி இடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசிவதோடு, சுகாதார கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் திருப்பூர் பெருமாநல்லூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது வடமாநில புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

newstamil.tv