CDL Paddy damaged
மாவட்ட செய்திகள்
750 ஏக்கரில் நடவு செய்த நெற் பயிர்களை சூழ்ந்த மழைநீர்
சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பூவாலை மேற்கு கிராமத்தில், சுமார் 750 ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பரவனாற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க வெள்ளப்பெருக்கால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக கவலை தெரிவித்த விவசாயிகள், பரவனாறு- அருவாமுக்கு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாக கூறிய விவசாயிகள், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
