வாணியம்பாடி அருகே சர்வீஸ் சாலையில் மழைநீர்

சர்வீஸ் சாலையில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
TPT Service road rain water
TPT Service road rain water
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்யும் நிலையில், வளையம்பட்டி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் இருபுறமும் உள்ள புறவழிச்சாலை குளமாக மாறியுள்ளது.

முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்குவதாக தெரிவித்த வாகன ஓட்டிகள், அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும், தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

newstamil.tv