

தனியார் பள்ளி ஆசிரியை
ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் விஐபி சிட்டி பகுதியை சேர்ந்தவர் 54 வயதான கீதா. இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கீதாவின் மூத்த மகள் சரண்யா ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வரும் நிலையில் இளைய மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
கணவரை இழந்த சரண்யா தனது 2 குழந்தைகளுடன் தாயின் அரவணைப்பில்தான் இருந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல இவர் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென அவரது மகன் பதற்றத்துடன் தனது தாய்க்கு போன் செய்து, பாட்டி கீதா ரத்தவெள்ளத்தில் மூச்சுப்பேச்சின்றி கிடப்பதாக அழுதுள்ளார். இதனால், அடித்துப்பிடித்து ஓடி வந்த சரண்யா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தாயை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்து சிலமணிநேரங்கள் ஆகிவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
கத்திக் கதறிய மகள்
இதனிடையே, தகவல் அறிந்து கீதாவின் வீட்டிற்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்ததோடு, திறந்து கிடந்த பீரோ மற்றும் அதில் சிதறி கிடந்த துணிகள் மற்றும் வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஆய்வு செய்தனர். அப்போது, தனது தாய் அணிந்திருந்த 10 சவரன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை, யாரோ திருடன்தான் கொ* செய்துள்ளதாக சரண்யா கத்திக்கதறி உள்ளார்.
அதனால், கீதாவின் வீட்டை சுற்றி இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், வெளிநபர்கள் யாரும் அங்கு வந்து சென்றதற்கான தடயமே இல்லை. அதன்பிறகு, கொ*யாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரபடுத்தப்பட்டது. அப்படியும், சிறு துரும்புகூட சிக்கவில்லை.
தாயின் நகைக்காக...
இதனிடையே, சரண்யாவிற்கு ஒரு ஆணுடன் தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்தது. அந்த நபரையும் போலீசார் விசாரணைவளையத்தில் கொண்டு வந்தனர். அவர் சம்பவம் நடந்தநேரத்தில் அந்த பகுதிலேயே இல்லை என்பது உறுதியானது. அதன்பிறகு, சரண்யா, அவரது மகன் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணைப்பார்வை திரும்பி உள்ளது.
அப்போதுதான், முதலைக்கண்ணீர் வடித்து திருட்டு நாடகம் ஆடிய மகள் சரண்யாதான் கொ*யாளி என்பதே வெளிச்சத்திற்கு வந்தது. அடிக்கடி தனது சொந்த தேவைக்காக தாயிடம் பணம் கேட்கும் சரண்யா, நகைகளையும் வாங்கி அடகு வைத்துள்ளார். அதில், சில நகைகளை மீட்டுக்கொடுத்த அவர் சிலவற்றை மீட்டுக் கொடுக்கவே இல்லை என தெரிகிறது.
நகைகளை கேட்டு ஆத்திரம்
இதற்கு மத்தியில்தான் வழக்கம்போல தனது தாயிடம் 30 சவரன் நகைககள் கேட்டுள்ளார் சரண்யா. யாருக்குதான் பணத்தை கொடுக்கிறாய்? ஏற்கெனவே அடகு வைத்த நகைகளையே மீட்டுக் கொடுக்கவில்லை, மேலும் நகைகள் கேட்டால் எப்படி தர முடியும்? என கேள்வி எழுப்பிய தாய் நகைகளை கொடுக்கவும் மறுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் ஆசிரியை
அப்போது, ஆத்திரமடைந்த சரண்யா தாயை சுவற்றில் பிடித்து தள்ளி உள்ளார். அதில், பின்மண்டையில் அடிபட்டு கீழே விழுந்த தாய் அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்தார். அதன் பிறகு பீரோவில் இருந்த துணிகளை எல்லாம் கீழே இழுத்துப்போட்டு நகைகள் மற்றும் பணம் திருடுபோனதுபோன்று செட்டப் செய்துவிட்டு வழக்கம்போல பள்ளிக்கு சென்றுவிட்டார் சரண்யா. அதன்பிறகு, மகன் மூலம் தகவலறிந்து வீட்டுக்கு வந்து அழுது நாடகத்தை அரங்கேற்றியும் சரண்யாவின் திட்டம் எடுபடவில்லை.
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் ஒட்டுமொத்த உண்மையையும் தன்வாயாலேயே கொட்டிய சரண்யா தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
வீடியோவில் காணலாம்