nellai
nellai

தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியல்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல் - போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த போலீசார்
Published on: 

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வண்ணார்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுய உதவிக் குழு மூலம் தினக் கூலி தொழிலாளர்களாக வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்தல், தமிழக அரசின் உத்தரவின்படி நாளொன்றுக்கு 736 ரூபாய் ஊதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

newstamil.tv