Vellore wine shop theft
மாவட்ட செய்திகள்
டாஸ்மாக் கடை உட்பட அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை
2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உட்பட அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. டாஸ்மாக் கடையில் 18 லட்சம் ரூபாய்க்கு மதுபாட்டில்கள் இருந்த நிலையில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
