பெண் விவசாயிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்... அதிர்ச்சியடைந்த தம்பதி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெண் விவசாயிக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்தும்படி நோட்டீஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17
17
Published on: 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெண் விவசாயிக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்தும்படி நோட்டீஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கவிதா, 100 நாள் வேலை செய்து கொண்டும், கணவருக்கு உதவியாக விவசாய வேலைகளை கவனித்துக் கொண்டும் வரும் நிலையில், கடந்த 26-ஆம் தேதி அஞ்சல் துறை மூலம் 2 கடிதங்கள் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில், தங்களது பெயரில் இயங்கி வரும் தர்ஷினி என்கிற நிறுவனத்துக்கு, 2023 - 2024 மற்றும் 2024 - 2025- ஆம் ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், வேலூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.

newstamil.tv