Malli rate high
Malli rate high

சங்கரன்கோவில் மலர் சந்தை - மல்லிகை ரூ.7,500 க்கு விற்பனை

நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Published on: 

கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் சந்தையில் நாளொன்றுக்கு 2,000 கிலோ மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், தற்போது 15 கிலோ மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், ஈரோடு சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

newstamil.tv