சென்னை ராமாபுரத்தில் கிரிண்டர் செயலி மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கைதான பிரபு, டைடஸ் ஜானி ஆகிய இருவரிடம் இருந்தும், மூன்று கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.