TVL Petrol issue
மாவட்ட செய்திகள்
பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விற்பனை; இருசக்கர வாகனம் பழுது வாகனத்தின் உரிமையாளர் பெட்ரோல் பங்கில் வாக்குவாதம்..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூரில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விற்பனை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூரில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விற்பனை செய்ததால் இருசக்கர வாகனம் பழுதானதாக கூறி, வாகனத்தின் உரிமையாளரும், சக வாகன ஓட்டிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர், தனது இருசக்கர வாகனத்திற்கு நாலூர் பாரத் பெட்ரோல் பங்கில் 5 லிட்டர் பெட்ரோல் போட்டு விட்டு சிறிது தூரம் செல்வதற்குள் வாகனம் பழுதாகி நின்றது.
பெட்ரோல் பங்கில் சென்று கேட்ட போது சரியாக பதிலளிக்காததால், வாகனம் வாங்கிய கடையிலிருந்து மெக்கானிக்கை வரவழைத்து சோதித்து பார்த்ததில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீசாரும் சோதித்து பார்த்ததில் கலப்படம் உறுதியானது.

