"கணவர் வேண்டுமா? நான் வேண்டுமா?" - வைகை ஆற்றங்கரையில் பயங்கரம்

சிவகங்கை அருகே கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்த பெண்ணை, ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் வைகை ஆற்றுப் பகுதிக்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொ* செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை
கிரைம் செய்தி நியூஸ்தமிழ்24x7
Published on: 

கணவருடன் கருத்து வேறுபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது கணவர் சரவணன் கட்டிட தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 8 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்த மாசானம் என்பவருடன் முத்துலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, இருவரும் மானாமதுரையில் வீடு பார்த்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு இடையே, முத்துலட்சுமியின் கணவர் சரவணன் மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். இதனால், முத்துலட்சுமியும் தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்த நிலையில், மாசானம் ஆத்திரமடைந்துள்ளார்.

சிவகங்கை
கொடூர சம்பவம்நியூஸ்தமிழ்24x7

முத்துலட்சுமியிடம் தகராறு

தன்னுடன் வாழ்ந்து வந்த முத்துலட்சுமி, மீண்டும் கணவரிடம் சென்றதை மாசானத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததால், முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில், முத்துலட்சுமியிடம் தனியாக பேச வேண்டும் என கூறி, அவரை மானாமதுரை அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதிக்கு மாசானம் வரவழைத்துள்ளார்.

வாக்குவாதம், ஆத்திரம், விபரீதம்

அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த மாசானம், முத்துலட்சுமியின் கழுத்தை நெரித்து கொ* செய்ய முயன்றிருக்கிறார். பின்னர், படுகாயமடைந்த முத்துலட்சுமி வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கருவேல மரங்களுக்கு இடையே முட்புதரில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார் மாசானம்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், முத்துலட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடூரன் கைது
முத்துலட்சுமி உயிரிழப்புநியூஸ்தமிழ்24x7

உயிரிழந்தார் முத்துலட்சுமி

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முத்துலட்சுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு, கொ* வழக்காக மாறியது.

குற்றவாளி கைது

இதையடுத்து, முத்துலட்சுமியின் மரணத்துக்கு காரணமான நபர் யார் என்பதை கண்டறிய மேற்கொண்ட விசாரணையில்தான், மாசானத்துக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரையில் சில தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் நகைக்காகப் பெண் ஒருவர் கொ* செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது கள்ளக்காதல் விவகாரத்தில் வைகை ஆற்றங்கரையில் இளம் பெண் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் உயிரிழப்பு
குற்றவாளி கைதுநியூஸ்தமிழ்24x7
சிவகங்கை
வைகை ஆற்றங்கரையில் பயங்கரம், நடந்தது என்ன?