41
41

பாறைகள் சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம்.. உரிமம் காலாவதியாகி 8 மாதங்கள் ஆனது அம்பலம்

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் குவாரி உரிமம் காலாவதியாகி 8 மாதங்களாக இயங்கி வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Published on: 

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் குவாரி உரிமம் காலாவதியாகி 8 மாதங்களாக இயங்கி வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேகா புளு மெட்டல் என்ற தனியார் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து 3 பேரை கைது செய்த போலீசார், குவாரி உரிமையாளர் மேகவர்ணனை தேடி வருகின்றனர்.

இதனிடையே புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உரிமம் காலாவதியான பின்னும் இயங்கி வந்தது தெரியவந்த நிலையில், துணை போன அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

newstamil.tv