CDL Sand theft
மாவட்ட செய்திகள்
விளையாட்டு மைதானம் அருகே 10 அடி ஆழத்திற்கு மண் திருட்டு
மண் திருட்டை தடுத்து நிறுத்தி மைதானத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுப்பாக்கம் பகுதியில் விளையாட்டு மைதானம் அருகே, 10 அடி ஆழத்திற்கு மண் வெட்டி எடுக்கப்பட்டு இரவு பகலாக திருடப்படுவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மைதானத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள இளைஞர்கள், மண் திருட்டை தடுத்து நிறுத்தி மைதானத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
