DGL Kodaikanal conductor issue
DGL Kodaikanal conductor issue

80 வயது முதியவரை அடித்த அரசுப் பேருந்து நடத்துனர்

10 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்ட முதியவரை தகாத வார்த்தை பேசி கன்னத்தில் அறைந்த நடத்துனர்
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசுப் பேருந்தில், 10 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்ட 80 வயது முதியவரை தகாத வார்த்தை பேசி கன்னத்தில் அறைந்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருந்த பேருந்தில் சீனிவாசபுரத்தில் ஏறிய முதியவர் செல்வராஜ், பேருந்து நிலையத்திற்கு வந்ததும் பாக்கி சில்லறையை கேட்டுள்ளார். இதனால் நடத்துனர் அவரை அடித்ததாக கூறப்படும் நிலையில், பணிமனை மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து முதியவரிடம் நடத்துனர் மன்னிப்பு கேட்டார்.

newstamil.tv