VLP RDM Dog issue
மாவட்ட செய்திகள்
மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கடித்துக் குதறிய தெருநாய்கள்
தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பர்கத் நகரில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை, தெருநாய்கள் கடித்துக் குதறிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நாய்களை விரட்டி ஆட்டினை காப்பாற்றினர். பர்கத் நகர் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களால், குழந்தைகளும், முதியவர்களும் வெளியில் நடமாடவே அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
