இணைப்பு சாலையை முறையாக அமைக்க கோரி போராட்டம்... போலீசார் அறிவுறுத்தலின் படி கலைந்து சென்ற மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புறவழி சாலையில் இணைப்பு சாலையை முறையாக அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
8
8
Published on: 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புறவழி சாலையில் இணைப்பு சாலையை முறையாக அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புறவழி சாலை அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், குடியாத்தம் பகுதியில் முக்கிய சாலைகளை இணைக்கும் புறவழி சாலை பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே போடி பேட்டையில் இருந்து சீவூர் செல்லும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் புறவழி சாலையில்,

இணைப்பு சாலை இரு பகுதிகளிலும் முறையாக அமைக்கவில்லை என கூறப்படுகிறது.

newstamil.tv