TUT Student seer
TUT Student seer

சீர் வரிசை பொருட்களுடன் ஊர்வலம் வந்த மாணவர்கள்

கல்லூரியின், 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து, மாணவர்கள் வழங்கினர்.
Published on: 

கல்லூரியின், 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து, மாணவர்கள் வழங்கினர். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் போப் நினைவு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பபிரிவு துறை தொடங்கப்பட்டது. இங்கு, பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் பலர் உள் நாடு மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு துறை முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழாவில் பங்கேற்றனர். அப்போது, 25 வகையான சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் வழங்கினர். 25 அடி உயர பேனரை தொங்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாணவ, மாணவிகள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்ட பின்னர், கலை நிகழ்ச்சிகள் களை கட்டின.

newstamil.tv