7
7

சாலையில் சென்ற காரில் திடீரென தீ... காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பிய உரிமையாளர்

சென்னை செங்குன்றம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: 

சென்னை செங்குன்றம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சோழவரத்தை சேர்ந்த நந்தகுமார், தனக்கு சொந்தமான காரில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், காரை சாலையில் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியேறினார்.

கார் முற்றிலுமாக தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

newstamil.tv