34
34

யோகா திருவிழாவின் விளம்பர பேனரில் தமிழ் புறக்கணிப்பு.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்பட்ட பேனர்கள்

புதுச்சேரி முழுவதும் முக்கிய சந்திப்புகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விளம்பர பேனர்கள் வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

மத்திய அரசின் ஆயுஷ் சுகாதாரத்துறை சார்பில் நடக்கவுள்ள சர்வதேச யோகா திருவிழா விளம்பர பேனர்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பேனர்களில் கருப்பு மை பூசி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

newstamil.tv