cm
மாவட்ட செய்திகள்
டிட்வா புயலால் பாதித்த இலங்கைக்கு தமிழக அரசு உதவி
நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு புறப்பட்ட கப்பலை, கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் முதற்கட்டமாக 950 டன் நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பலை சென்னை துறைமுகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 300 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு, 25 மெட்ரிக் டன் பால் பவுடர், தலா ஐந்தாயிரம் வேட்டி, சேலைகள், தலா 10 ஆயிரம் போர்வை, துண்டுகள், ஆயிரம் தார்ப்பாய் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
