6
மாவட்ட செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்... தனியாக உண்டியல் வைத்து தனிநபர் வசூலித்து வருவதாக புகார்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் தனி உண்டியல் வைத்து பக்தர்களிடம் பணம் வசூல் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அம்மாபட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில், அதே ஊரை சேர்ந்த பாலு மகேந்திரன் என்பவர், தான் கோயிலின் பரம்பரை அறங்காவலர் என கூறி கொண்டு, தனியாக உண்டியல் வைத்து பக்தர்களிடம் காணிக்கை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.