New Project - 2025-05-28T210113
New Project - 2025-05-28T210113

முதல் மரியாதை பிரச்சனையில் நிறுத்தப்பட்ட கோவில் திருவிழா... திருவிழா நடத்த அனுமதிக்கோரி வட்டாச்சியரிடம் முறையீடு

மதுரை வாடிப்பட்டி அருகே முதல் மரியாதை பிரச்சனையில் நிறுத்தப்பட்ட கோவில் திருவிழாவை நடத்தக்கோரி ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

மதுரை வாடிப்பட்டி அருகே முதல் மரியாதை பிரச்சனையில் நிறுத்தப்பட்ட கோவில் திருவிழாவை நடத்தக்கோரி ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுநீரேத்தான் துர்க்கை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், முதல் மரியாதை தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் திருவிழா நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் தீர்வு எட்டபடாத நிலையில், ஒரு தரப்பினர் தங்களுக்கு திருவிழா நடத்த அனுமதி கிடைத்தாக கூறி முளைப்பாறி ஊர்வலம் சென்றனர்.

அதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்தவர்கள் வாடிப்பட்டி வட்டாச்சியரிடம் திருவிழா நடத்த அனுமதி கோரினர்.

newstamil.tv