

அடுத்தடுத்து இயக்கப்படும் பேருந்துகளால் ஊழியர்கள் தகராறு
"பேருந்துகளை இயக்கும் நேர இடைவெளியை அதிகரிக்கவும்"
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் வழி சாலையில், தனியார் பேருந்துகளுக்கு இடையே டிக்கெட் ஏத்துவதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படும் சூழ்நிலையில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு தனியார் பேருந்துக்கும் இடைப்பட்ட இடைவெளி நேரம் மிக குறைவான மூன்று நிமிடங்களுக்கு உட்பட்ட நேரம் மட்டும் ஒதுக்கப்படுவதால் அந்த நேரத்தில் ஒருவரை
ஒருவர் முந்தி செல்வதற்கு அசுர வேகத்தில் செல்வதால் சாலையில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் உள்ள பயணிகள் என அனைவரும் உயிரைகையில் பிடித்தபடி பயணிக்க வேண்டி உள்ளது.
இன்று தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே வாக்குவாதம். ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள இருந்த சூழ்நிலையில், பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளின் சமரசத்தால் நிலைமை சகஜத்திற்கு திரும்பியது.
உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கூடி பேசி பேருந்துகளுக்கான இடைவெளி நேரத்தை நேரத்தை கூடுதலாக நியமிக்கும் வரை இந்த
போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என இந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.