Bear attack
மாவட்ட செய்திகள்
விவசாயி கையை கடித்து குதறிய கரடி
புதருக்குள் பதுங்கி இருந்த கரடி திடீரென அவரை கடுமையாக தாக்கியது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே விவசாயி கையை கடித்து குதறிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என சக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வட்டகுளம் கிராமத்தை சேர்ந்த முருகன் தமது விவசாய நிலத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த கரடி திடீரென அவரை கடுமையாக தாக்கியது. இதனால் கையில் முறிவு ஏற்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
