New Project (42)
New Project (42)

சாலையில் சென்ற கார் மீது காட்டெருமை விழுந்தது... காட்டெருமை விழுந்ததில் காரின் முன்பக்க கண்ணாடி சேதம்

கொடைக்கானல் மலைச் சாலையில் சென்ற கார் மீது காட்டெருமை விழுந்த வீடியோ காட்சி வெளியானது.
Published on: 

கொடைக்கானல் மலைச் சாலையில் சென்ற கார் மீது காட்டெருமை விழுந்த வீடியோ காட்சி வெளியானது.

கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு நோக்கி கார், ஒன்று சென்று கொண்டிருந்தது. மச்சூர் என்ற இடத்தில் சாலையின் இடது பக்கத்தில் இருந்து செல்ல வலது பக்கம் கடக்க முயன்ற காட்டெருமை மீது கார் மீது விழுந்தது.

இதனால் சிறிது தூரம் தள்ளி விழுந்த காட்டெருமை, மீண்டும் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதில், காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.

newstamil.tv